என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம்
நீங்கள் தேடியது "அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம்"
ஷரியத் நீதிமன்றங்களை நிறுவ திட்டமிடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சுப்பிரமணியசுவாமி குறிப்பிட்டுள்ளார். #ShariatCourts #AIMPLB #SubramanianSwamy
லக்னோ:
நாட்டின் இஸ்லாமிய விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் உயர் அமைப்பான அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினர் ஜபர்யாப் ஜிலானி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் நீதிமன்றங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இதற்கான செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சாத்தியங்கள் குறித்து ஜூலை 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் மேலிட கூட்டத்தில் விவாதித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இந்தியாவில் ஒரே நாடு ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும் என்றும், ஷரியத் நீதிமன்றங்கள் அமைப்பது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாமல் வெளியில் இருந்து வரும் எதையும் ஏற்க முடியாது எனவும் அப்போது அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சுப்பிரமணிய சுவாமி, ஷரியத் நீதிமன்றங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #ShariatCourts #AIMPLB #SubramanianSwamy

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் நீதிமன்றங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. #ShariatCourts #AIMPLB
லக்னோ:
நாட்டின் இஸ்லாமிய விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் உயர் அமைப்பான அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினர் ஜபர்யாப் ஜிலானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
'ஷரியத் நீதிமன்றங்களின் நோக்கம் இதர நீதிமன்றங்களை அனுகாமல், ஷரியத் சட்ட திட்டப்படி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகும். தற்போது உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 40 ஷரியத் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதுபோன்று நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் நீதிமன்றங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, ஒரு ஷரியத் நீதிமன்றத்தை நிர்வகிக்க 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் நீதிமன்றங்களை அமைப்பதற்கான செலவினங்களை எப்படி எதிர்க்கொள்வது என்பது தொடர்பாக வரும் ஜூலை 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் மேலிட கூட்டத்தில் விவாதித்து தீர்மானிக்கப்படும்.
மேலும், ஷரியத் சட்டதிட்டங்களை கற்று ஆய்ந்து, வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் பணியாற்றும் நபர்களை நியமிக்க குழுவும் அமைக்கப்படும். இந்த குழுவின் மூலம் சராசரி பொதுமக்களும் ஷரியத் சட்ட உதவிகளை பெறுவதற்கு தேவையான வழிவகை செய்ய டெல்லியில் நடைபெறும் மேலிட கூட்டத்தில் திட்டம் வகுக்கப்படும்.'
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ShariatCourts #AIMPLB
×

X